விலங்கு மனிதர்கள்
சாலையில் நடக்கையில்
பேருந்துகளில் பயணிக்கையில்
என்றில்லாது எங்கும்
பக்கத்தில் இருப்பவர்களை
பற்றி எண்ணாது
எச்சில் உமிழும் சிலர்...
கையில் உள்ள பொருளை
அவரவர் வீட்டை தவிர்த்து
போகும் இடம் எல்லாம்
குப்பையை போடும் சிலர்...
காலையில்
அவர்களை தவிர
மற்றவற்கு வேலை இல்லை
என்ற எண்ண்ததோடு
வண்டிகளை ஓட்டும் சிலர்...
தட்டிக் கேட்டால்
முட்டி பெயருமோ என்று
எண்ணிக் கொண்டு இருக்கும்
நம்மில் பலரும்...
இன்று உலகில்
எவற்றைப் பற்றியும்
கவலை படாது
ஆறாம் அறிவாம்
பகுத்தறிவை விலங்கு போட்டு
அடக்கம் செய்து விட்ட
நாமெல்லாம் விலங்கு மனிதர்களோ???
Monday, July 16, 2007
29.12.2006: நாம் மனிதர்கள் தானா???
Labels:
என் பிதற்றல்கள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment