மிகவும் நேசிக்கிறேன்
என்னவளே...
நான் உன்னை நேசிப்பது நீ அறிந்ததே.
ஆனால் இப்பொழுது
நான் உன்னை மிகவும் நேசிக்கிறேனடி!
நீ, என்னில் பாதியாகவும்
என் உயிரில் கலந்தும் இருக்கிறாய் என்பதாலோ...
நீ, நம்முடைய பிள்ளையை
சுமந்து கொண்டு இருக்கிறாய் என்பதாலோ...
நீ, ஓய்வில் இருக்க வேண்டும் என்று
வீட்டு வேலைகளை உன்னால் நான்
கற்றுக் கொண்டேன் என்பதால்
மட்டுமோ இல்லையடி பெண்ணே.
இதுவரை, நீ எவ்வளவு கஷ்டத்திலும்
சிரித்துக் கொண்டே இருந்திருக்கிறாய்
என்று உணர வைத்த காரணத்தாலும்...
உனக்கு முன் என்னை நன்கு
உன்னைப் போலவே இன்முகத்துடன்
என்னை வளர்த்தவர்களை உணர வைத்த
காரணத்தாலும்...
என் இனியவளே,
உன்னை மிகவும் நேசிக்கிறேனடி!!!
Saturday, August 4, 2007
06.02.2007: குழந்தையை எதிர்பார்த்து இருப்பவன் தன் மனைவிக்காக எழுதினால்...
Labels:
என் பிதற்றல்கள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment