Monday, July 28, 2008

27.July.2008: அளவிடமுடியாதது!!!!

அளவிடமுடியாதது!!!!

பெண்ணே!!
உன்னைக் காண குறுக்கு வழி

என்றெண்ணி ஓடோடி வந்த வேகத்தை
இன்ன velocity என்று அளவிடமுடியாது...

உன்னைக் கண்டதும் என் மனம்
ஆசையில் துடிக்கும் துடி துடிப்பை
இன்ன frequency என்று அளவிடமுடியாது...

உன்னைக் கண்ட அந்த நொடியில்
என்னுடைய உள்மனதின் இன்ப அலறலை
இன்ன decibel என்று அளவிடமுடியாது...

அதுபோலவேதான்
என்னவளே...

நான் உன்பால் கொண்டிருக்கும்
தூய அன்பானதும் அளவிடமுடியாதது!!!

No comments: