தாய்
அன்புடனும் பாசத்துடனும் அரவணைத்து
ஆசையோடு உச்சி முகர்ந்து
இளையவன் மூத்தவன் என்றில்லாமல்
ஈன்ற அனைத்து பிள்ளைகளையுமே
உயிர் என்று எண்ணியபடி
ஊரார் போற்ற அவர்களை வளர்த்து
எதற்கும் கலங்காது இருக்க
ஏற்றம் வரும் போது பணிவோடும்
ஐயம் வந்தால் கலந்து ஆலோசித்தும்
ஒரு முடிவு எடுக்கும் திறன் பெற
ஓயாது நற்பண்புகள் புகட்டி
ஒளவை கூற்றினை உணர வைத்து
ஃதே இருக்க சக்தி கொடுத்த(ப்ப)வள்!!
Friday, July 13, 2007
27.11.2006: அ முதல் ஃ வரை மட்டுமல்ல...
Labels:
என் பிதற்றல்கள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment