Monday, March 22, 2010

09.Mar.2010: தமிழுடன் ஓர் உரையாடல்

என் மொழித் தாய்
தமிழுடன்
உரையாட ஆசைப்பட்டு
அவளிடம் சில
மணித்துளிகளை வேண்டி பெற்றேன்.

அனைத்தும் நலமா?
என்ற என் வினாவினை
எதிர்பாராதவள் போல
கண் கலங்கினாள் அவள்.

என்னை பதற்றம்
தொற்றிக் கொள்ள - அவளிடம்
கலங்கிய காரணம்
கூறக் கோரினேன்.

என் தூய்மை
நீங்குமாறு
ஊர் ஊராக
என்னை கூறுகளாக்கி

களங்கப் படுத்தியுள்ளீர்களே...

போதாததற்கு
வேற்று மொழி கலந்து
தமிங்கிலமாகவோ
தமிந்தியாகவோ
தமுங்காகவோ
மாற்றிவிட்டீர்களே...

என நொந்தவளை
கேள்வியோடு பார்த்த எனக்கு
"எப்படி இருக்கிறீர்கள்" என்பதை...
"எப்டி இருக்க"
"எப்டி இருக்கீங்க"
"எப்படி இருக்கேள்"
"எப்படி இருக்கீய"
"எப்டி கீர"
என மாறிய உதாரணம் கூறினாள்.

இதற்கே இப்படி
வருத்தப்படுபவளைப் பார்த்து
ஒன்றும் செய்ய முடியாதவனாய்
நிற்க நேரிட்ட வருத்தத்தோடு
வேண்டினேன் தமிழிடம்...

sorry என்னை மன்னிச்சிடு என்று!!!

No comments: